மம்தா வெற்றி எதிரொலி : கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள்| Dinamalar

மம்தா வெற்றி எதிரொலி : கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (11)
Share
பவானிபூர் இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெற்ற அபார வெற்றியை அடுத்து, பா.ஜ.,விலிருந்து மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள், திரிணமுல் காங்கிரசில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வரான பின், அம்மாநில பா.ஜ., பின்னடைவை சந்தித்து வருகிறது. பா.ஜ., -
மம்தா,  வெற்றி, எதிரொலி,  கட்சி தாவும், எம்.எல்.ஏ.,க்கள்

பவானிபூர் இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெற்ற அபார வெற்றியை அடுத்து, பா.ஜ.,விலிருந்து மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள், திரிணமுல் காங்கிரசில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வரான பின், அம்மாநில பா.ஜ., பின்னடைவை சந்தித்து வருகிறது.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற முகுல் ராய், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்து அதிர்ச்சி அளித்தார். அவருடன், பா.ஜ.,வின் பல முக்கிய தலைவர்கள் திரிணமுல் கட்சிக்கு தாவினர். அடுத்த சில நாட்களிலேயே மேலும் மூன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.


latest tamil news




கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக மற்றொரு பா.ஜ., - எம்.எல்.ஏ., சமீபத்தில் அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் ஜூலை வரையில் அமைச்சராக இருந்த பபுல் சுப்ரியோவும், சமீபத்தில் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பவானிபூர் சட்டசபை இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பின் மேலும் பல பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திரிணமுல் தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக செய்திகள் கசிகின்றன. மேற்கு வங்க பா.ஜ., வில் உள்ள மூத்த தலைவர்கள், புது முகங்களை அரவணைத்துச் செல்ல தயங்குவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X