'நீட்' தேர்வு ரத்து விவகாரம்: 12 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை :கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, 12 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நுழைவுத் தேர்வுஎதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், ஆந்திரா, சத்தீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம், கோவா மாநில
 நீட்  தேர்வு, 12 முதல்வர்கள், ஸ்டாலின் ,கடிதம்

சென்னை :கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, 12 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


நுழைவுத் தேர்வுஎதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், ஆந்திரா, சத்தீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம், கோவா மாநில முதல்வர்களுக்கு, ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:கடந்த சில ஆண்டுகளில், 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை முறை, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, தமிழக அரசு சார்பில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.


அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும், மாற்று சேர்க்கை நடைமுறைகள், அதற்கான சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்படி, அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையை கடிதத்தில் இணைத்துள்ளேன். அந்த குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக சட்டசபையில், 'தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021' என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதன் நகலையும் இணைத்துள்ளேன்.'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

மாநில அரசுகளால் நடத்தப்படும், மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் வழியே, அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே, எங்கள் நிலைப்பாடாகும்.இதுதொடர்பாக, மாநில அரசுகள், உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில், தங்கள் அரசியலமைப்பு உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.


தங்கள் ஆதரவுகடிதத்தில் இணைத்துள்ள ஆவணங்களை ஆராய்ந்து, கிராமங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில், சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும்.அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதுபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க, மாநில முதல்வர்கள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னையில், அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.மேலும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை மொழிபெயர்ப்பு நகலை, மாநில முதல்வர்களுக்கு வழங்கி, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துக்கூறி, தமிழக நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோர வேண்டும் என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
05-அக்-202122:30:31 IST Report Abuse
elakkumanan கடுதாசி எல்லாம் பிரமாதமா எழுதுவாங்க......அம்பது வருசமா, காவேரி பிரச்னையை கடுதாசி மட்டுமே எழுதி தீர்த்துவைத்த மகானின் மகன்............கடுதாசியெல்லாம் பயங்கரமா ரைமிங் எல்லாம் வச்சு உரிமைகள், சட்ட பொந்துகள், எல்லாம் சுத்தமா எழுதுவாப்ல..............ஆனால், ஒன்னியும் ஆகாது ...நீற்று கூட, உச்ச நீதிமன்றத்தில் நாலஞ்சு மொக்கை சாமிகள் மந்திரித்து மஞ்சள் தெளித்து அனுப்பிவிடப்பட்டிருக்கிறார்கள்...........சும்மா.......உள்ளாட்சி தேர்தல் ஒட்டு பதிவு நாளைக்கு.. அதுக்காக இந்த கடுதாசி நாடகம்...........ராசிநாமா கடுதாசியை அப்பாவுக்கு அனுப்பிவைத்து மக்களுக்கு காதில் பூந்தோட்டத்தையே சொருகி அழகுபார்த்த குடும்பம்டா...............கடுதாசி எழுதுவதெல்லாம் ஜுஜுபி....எந்த வேலையும் நடக்கல...எந்த திட்டமும் போடல...........ஏன்னா, காசு இல்லை............ஆட்சி செய்யவும் தெரியாது...ஓசி கொடுப்பதுதான் ஆட்சி ன்னு அய்யா சொல்லிக்கொடுத்தட்டு போய்ட்டாரு...வேற எதுவும் தெரியாது...இதுல, மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதமெல்லாம் நல்ல ப்ளாக் காமெடி....நடக்கட்டும்......டுமீல் பட்டியானுக்கு இதுவே அதிகம்தான்.............நீட் தேர்வு என்பது இவர்களது வருமானத்தை மொத்தமா தடுத்துவிட்டது...இவர்களின் பரம்பரையில் இனி யாருமே மருத்துவர் ஆகமுடியாது.... அதுதான் இம்பூட்டு கோவம் அய்யாவுக்கு...அய்யா என்னைக்குமே, தனக்காக மட்டுமே செயல்படுவார்..அதுதான் கட்சியின் ஒரே கொள்கை...கட்சியே தனக்கான அடிமை கூட்டம்தான்..............அப்பொறம், இப்பிடித்தான் இருக்கும்............பதிலுக்கு யாராவது ஒரு முதல்வர் இந்தியில் கடுதாசி எழுதி அசிங்கப்படுத்தப்போறாரு.........இன்னொரு அசிங்கம்...நாம பார்க்காத அசிங்கமா? தனி திராவிட நாடு முதல் நேற்றைய கொங்கு நாடு வரை நாம பார்க்காத அசிங்கமா?
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-அக்-202121:21:52 IST Report Abuse
Narayanan உடனடியாக உச்ச நீதிமன்றம் ஸ்டாலினுக்கு தண்டனை வழங்கவேண்டும் . நீதிமன்றம் எடுத்த முடிவுக்கு ,தான் கட்டுபடாதது மாத்திரம் இல்லாமல் மற்ற மாநில முதல்வர்களையும் அப்படிநடக்க வலியுத்துவதால் தண்டனை அவசியம் .
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
05-அக்-202120:46:42 IST Report Abuse
GMM NEET தேர்வில் மாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு 85 சதவீதம். (கூட்டாட்சி தத்துவம் காண 50 சதவீதம் போதும். ) பொது பிரிவுக்கு அதிக மதிப்பெண். அனைவரும் பொது பிரிவுக்கு தகுதி. ( பிற்பட்ட மாணவர் பொது பிரிவு மாணவரை விட அதிக மதிப்பெண் பெற்றால், பொது பிரிவில் சேர்க்கின்றனர். ( இதன் மூலம் உயர் வகுப்பு மாணவர் கல்வியை தடுக்க முடியும். எண்ணிக்கையை குறைக்க முடியும்.) பிற மாவட்டத்தில் தந்தையின் தமிழ் சாதி சான்று கொண்டு, பிள்ளைக்கு கேட்டால், இந்த சாதி பெயர் அரசு அட்டவணையில் இல்லை என்று திராவிடர் கூறுகின்றனர். பின் அரசு அட்டவணை காண்பித்து, மனு செய்து சாதி சான்று வாங்கும் முன் தேர்வு தேதி வந்துவிடும். அரசு கோட்டா கிடைக்காமல், நிர்வாக கோட்டாவில் கடன் வாங்கி தமிழர் படிக்க வேண்டிய நிலை. NEET ஏழை மருத்துவம் படிக்க உதவும். கோடிக்கணக்கான நிர்வாக ஒதுக்கீடு நன்கொடையை தடுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X