நீட் தேர்வு ரத்து விவகாரம்: 12 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு ரத்து விவகாரம்: 12 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (36+ 76)
Share
சென்னை :கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, 12 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நுழைவுத் தேர்வுஎதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், ஆந்திரா, சத்தீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம், கோவா மாநில
 நீட்  தேர்வு, 12 முதல்வர்கள், ஸ்டாலின் ,கடிதம்

சென்னை :கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, 12 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


நுழைவுத் தேர்வு



எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், ஆந்திரா, சத்தீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம், கோவா மாநில முதல்வர்களுக்கு, ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:கடந்த சில ஆண்டுகளில், 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை முறை, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, தமிழக அரசு சார்பில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும், மாற்று சேர்க்கை நடைமுறைகள், அதற்கான சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்படி, அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையை கடிதத்தில் இணைத்துள்ளேன். அந்த குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக சட்டசபையில், 'தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021' என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதன் நகலையும் இணைத்துள்ளேன்.'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

மாநில அரசுகளால் நடத்தப்படும், மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் வழியே, அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே, எங்கள் நிலைப்பாடாகும்.இதுதொடர்பாக, மாநில அரசுகள், உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில், தங்கள் அரசியலமைப்பு உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.


தங்கள் ஆதரவு



கடிதத்தில் இணைத்துள்ள ஆவணங்களை ஆராய்ந்து, கிராமங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில், சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும்.அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதுபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க, மாநில முதல்வர்கள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னையில், அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.மேலும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை மொழிபெயர்ப்பு நகலை, மாநில முதல்வர்களுக்கு வழங்கி, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துக்கூறி, தமிழக நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோர வேண்டும் என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X