பொது செய்தி

தமிழ்நாடு

காற்றாலை மின்சாரம் சரிவு வாரியத்திற்கு நெருக்கடி

Updated : அக் 06, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :நிலக்கரி இருப்பு குறைவாக உள்ள நிலையில், சீசன் முடிந்ததால் கற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்காததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 8,580 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. மே - செப்., வரை காற்றாலை சீசன்.காற்றாலைகளில்
காற்றாலை, மின்சாரம் , வாரியம், நெருக்கடி

சென்னை :நிலக்கரி இருப்பு குறைவாக உள்ள நிலையில், சீசன் முடிந்ததால் கற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்காததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 8,580 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. மே - செப்., வரை காற்றாலை சீசன்.காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. ஒரு யூனிட் விலை சராசரியாக 3.10 ரூபாய் என்ற குறைந்தளவில் உள்ளது. இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து தினமும், 8 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைத்தது.தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியம் காற்றாலை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தியது. இந்நிலையில், சீசன் முடிவடைந்ததால், காற்றாலைகளில் இம்மாதம், 1ம் தேதி, 18 லட்சம் யூனிட்கள்; 2ல், 12 லட்சம்யூனிட் என குறைந்தளவில் தான் மின்சாரம் கிடைக்கிறது.

ஏற்கனவே, நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதால் 4,320 மெகா வாட் திறன் உடைய, அனல் மின் நிலையங்களில் 2,500 மெகா வாட்டிற்கு குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது, காற்றாலை மின்சாரமும் குறைந்துள்ளதால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202109:37:10 IST Report Abuse
duruvasar நொண்டி குதிரைக்கு சரிக்கி விட்டதுதான் சாக்கு. இப்படி வேண்டாத சொல்லாடல்களை கொடுத்தவன் யாரு தெரிந்தால் தெரிவியுங்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202106:10:03 IST Report Abuse
Kasimani Baskaran மொத்த இந்தியாவிலும் மூன்று நாளுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பதாகவும் அதனால் இந்தியாவே நாலு நாளில் இருண்டுவிடும் என்று சி என் என்னில் (பொய்) சொன்னார்கள். திமுக அரசு அதிமுகதான் நிலக்கரியை திருடிவிட்டது என்று சொல்கிறது. பாஜக அரசு என்ன பதில் சொல்லுகிறது என்று பார்க்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X