அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

Updated : அக் 05, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2+ 2)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தலில், மக்கள் ஓட்டு போட தயாராக உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல், 9ம் தேதி நடக்க உள்ளதால், அப்பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் களைகட்டியுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்
நாளை, 9 மாவட்டங்கள், ஊரக உள்ளாட்சி,தேர்தல்

சென்னை : தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தலில், மக்கள் ஓட்டு போட தயாராக உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல், 9ம் தேதி நடக்க உள்ளதால், அப்பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் களைகட்டியுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.


ஓட்டுப்பதிவு



முதல் கட்டமாக, நாளை ஒன்பது மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்; 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்; 1,577 கிராம ஊராட்சி தலைவர்; 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி
களுக்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிரசாரம், நேற்று மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்தது. பிரசாரத்திற்கு வந்திருந்த பிற மாவட்டத்தினர் வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை முதல், 'டாஸ்மாக்' கடைகள் மற்றும் 'பார்'கள் மூடப்பட்டன.

ஓட்டுப்பதிவு தினமான 6ம் தேதி நள்ளிரவு வரை, அவற்றை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்துவது; 'வீடியோ' பதிவு செய்வது; 'வெப் கேமரா' பொருத்தி, இணையதளங்களில் ஒளிபரப்புவது; அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

'நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 'மாவட்ட தேர்தல் அலுவலர்களும், போலீஸ் எஸ்.பி.,க்களும் கவனமாக செயல்பட்டு, அமைதியான முறையில் தேர்தல் நடத்த இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.நாளை முதல் கட்ட தேர்தலில், 7,921 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மொத்தம் 41 லட்சத்து 93 ஆயிரத்து 966 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தல் அமைதியாக நடக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதால், நான்கு விதமான ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.


இரண்டாம் கட்ட தேர்தல்



ஒன்பது மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்; 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்; 1,324 கிராம ஊராட்சி தலைவர்; 10 ஆயிரத்து 329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அங்கு, இறுதிக்கட்ட பிரசாரம் களைகட்டியுள்ளது.


வட்டார பார்வையாளர்கள் 74 பேர் நியமனம்



ஊரக உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க,74 வட்டார பார்வையாளர்களாக, மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஒன்பது மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும், மூத்த அதிகாரி வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம், 74 வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர், மொபைல் எண் போன்ற விபரங்களை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202108:28:49 IST Report Abuse
duruvasar இந்தியாவிலேயே அதிகார துஷ்பிரயோகம், பணபலம் இல்லாமல் வெற்றி பெற போகிற முதல் ஆளும் கட்சி என அனைத்து காட்சி ஊடகங்ஙளூம் கருத்து கணிப்பில் அறுதியிட்டு கூறிவிட்டார்கள். திமுக தொண்டர்கள் மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்களுக்கு காவலுக்கு செல்ல எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படாத லால் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் தான் வராரு . . . . . . . . . . . .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202105:32:49 IST Report Abuse
Kasimani Baskaran குவாட்டர் கொடுக்காமல் பெறப்படும் வெற்றியே வெற்றி, மற்ற வெற்றிகளெல்லாம் வெற்றிகளே அல்ல என்பதற்கிணங்க திமுகவின் சிக்சர்களுக்கு பதில் சொல்ல பொதுமக்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X