பொது செய்தி

தமிழ்நாடு

ஆடைகளுக்கான வரியை உயர்த்தாதீர்! தமிழக முதல்வரிடம் 'சைமா' முறையீடு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை உயர்த்த கூடாது என, 'சைமா' சங்கம், தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.அதன் சங்க தலைவர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:வரும் 2022, ஜன., 1ம் தேதி முதல், ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிகிறோம். கொரோனாவால், பின்னலாடை துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்பை

திருப்பூர்:ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை உயர்த்த கூடாது என, 'சைமா' சங்கம், தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.அதன் சங்க தலைவர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:வரும் 2022, ஜன., 1ம் தேதி முதல், ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிகிறோம். கொரோனாவால், பின்னலாடை துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
கடன் திருப்பி செலுத்த அவகாசம், அவசர கால கடன் என, அரசு திட்டங்களால், தற்போது, 65 சதவீத அளவில் பின்னலாடை உற்பத்தி நடக்கிறது. தற்போது, பின்னலாடைகளுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை, 12 சதவீதமாக உயர்த்தினால், ஆடை வாங்க, சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுவர்.எனவே, ஆயத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதம் என்கிற நிலையிலேயே சீராக தொடர வேண்டும். இதுகுறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலுடன் பேசி, பரிசீலித்து, வரி உயர்த்தும் முடிவை கைவிட செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X