தமிழ்நாடு

தாறுமாறாக உயர்ந்த நிலக்கரி விலை: 3 மடங்கு உயர்வு! சாய ஆலைத் துறையினர் கவலை

Updated : அக் 05, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:நிலக்கரி விலை மூன்று மடங்கு உயர்வால், திருப்பூர் பகுதி சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் தவியாய் தவிக்கின்றன.திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து, 470 சாய ஆலைகள்; 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள்; 100 சாய ஆலையுடன் கூடிய தனியார் சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. சாயக்கழிவு சுத்திகரிப்பின் இறுதி நிலையில், நீராவியாதலுக்கு எவாபரேட்டர்கள்
தாறுமாறாக உயர்ந்த நிலக்கரி விலை:  3 மடங்கு உயர்வு! சாய ஆலைத் துறையினர் கவலை

திருப்பூர்:நிலக்கரி விலை மூன்று மடங்கு உயர்வால், திருப்பூர் பகுதி சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் தவியாய் தவிக்கின்றன.திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து, 470 சாய ஆலைகள்; 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள்; 100 சாய ஆலையுடன் கூடிய தனியார் சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. சாயக்கழிவு சுத்திகரிப்பின் இறுதி நிலையில், நீராவியாதலுக்கு எவாபரேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான பாய்லர்களுக்கு, நிலக்கரி பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மழையால், விறகு கிடைப்பதும் சிக்கலாகியுள்ளதால், சாய ஆலை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:சுத்திகரிப்பு மையங்களுக்கு, தினமும், 600 டன் அளவு நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், 250 முதல் 300 டன் மட்டுமே கிடைக்கிறது.

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலையையும் உயர்த்தி விட்டனர்.ஒரு டன் 4 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலக்கரி விலை, கடந்த மூன்று மாதங்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது, 12 ஆயிரம் ரூபாயாகி விட்டது.விறகு விலை உயர்வுஉள்நாட்டு நிலக்கரி பயன்பாடால் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், சீனா தற்போது, இந்தோனேஷியாவிலிருந்து அதிகளவு நிலக்கரி கொள்முதல் செய்கிறது; நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு இதுவும் முக்கியமான காரணம் என்கின்றனர், இறக்குமதியாளர்கள்.

நிலக்கரிக்கு மாற்றாக சில பொது சுத்திகரிப்பு மையங்கள், விறகு பயன்படுத்த துவங்கியுள்ளன. மழையால், விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டன் 3,500 ரூபாயாக இருந்த விறகு விலை, 4,500 ரூபாயாக உயர்ந்து விட்டது.எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடால், திருப்பூர் சாய ஆலை துறையினர் தவியாய் தவித்து வருகிறோம். சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செலவினம், 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

துணிக்கு சாயமேற்ற பயன்படுத்தும் சாயங்கள், ரசாயனங்கள் விலையும் அதிகரித்துள்ளது. சாயமேற்றும் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.ஒரு டன் 4 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலக்கரி விலை, கடந்த மூன்று மாதங்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது, 12 ஆயிரம் ரூபாயாகி விட்டது.சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செலவினம், 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. துணிக்கு சாயமேற்ற பயன்படுத்தும் சாயங்கள், ரசாயனங்கள் விலையும் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Krishnan - Bangalore,இந்தியா
05-அக்-202115:05:19 IST Report Abuse
Gokul Krishnan விறகு பஞ்சமா... சீமை கருவேலனா சும்மாவே வெட்டிக்கலாம்னு அறிக்கை விடுங்கய்யா ஈரோடு, திருப்பூர் மாவட்டத்துல எக்கச்சக்கமா கெடக்குதில்ல சும்மா பீலா விட்டுக்கிட்டு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202109:51:06 IST Report Abuse
duruvasar நிலக்கரி காணாமல் போகுதுன்னு பாலாஜி அய்யா பாங்காக் கூறியபோது ஏளனம் செய்தீர்களே. இப்ப பாருங்க. அவரே இன்னும் தேடிக்கிட்டைதான் இருக்காரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X