பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் திருத்தத்துக்கு 'அமோக' வசூல்...

Added : அக் 04, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியிலுள்ள சில 'நெட்' சென்டர்களில், ஆதார் கார்டில் பிழை திருத்தம் செய்ய, பெரும் தொகை வசூலிக்கப்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஆதார் அட்டை வங்கி சார்ந்த சேவை, அரசின் மானியத்திட்டம் போன்ற அனைத்து சலுகைகளையும் பெற ஆதார் எண் அவசியமாகியுள்ளது.புதிய ஆதார் அட்டை வேண்டியும், ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில்

அவிநாசி:அவிநாசியிலுள்ள சில 'நெட்' சென்டர்களில், ஆதார் கார்டில் பிழை திருத்தம் செய்ய, பெரும் தொகை வசூலிக்கப்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஆதார் அட்டை வங்கி சார்ந்த சேவை, அரசின் மானியத்திட்டம் போன்ற அனைத்து சலுகைகளையும் பெற ஆதார் எண் அவசியமாகியுள்ளது.

புதிய ஆதார் அட்டை வேண்டியும், ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், திருத்தம் செய்து, மொபைல் எண் இணைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள தினமும் ஏராளமானோர் ஆங்காங்கே உள்ள அரசு இ-சேவை மையம், தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களை நாடுகின்றனர்.கம்ப்யூட்டர் சென்டர்களில் ஆதார் அட்டையில் பிழைத்திருத்தம் செய்ய, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள, குறைந்தது, 300 ரூபாய் முதல், அதிகபட்சம், 1,500 ரூபாய் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுவும், அப்பாவி கிராம மக்களிடம், மனசாட்சியில்லாமல், 'நெட்' சென்டர் உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். அரசு இ--சேவை மையங்களில், 'பயோ மெட்ரிக்' பதிவுக்கு, 100 ரூபாய், திருத்தம் செய்ய, 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.ஆனால், அவிநாசியிலுள்ள கடைகளில், ஆயிரக்கணக்கில் தொகை வசூலிக்கப்படுவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டு, மாவட்டம் முழுக்கவே பரவலாக உள்ளது.
இது குறித்து, அவிநாசி தாசில்தார் ராகவி கூறுகையில், ''கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தெரிந்தால் பொதுமக்கள், போலீசில் புகார் கொடுக்கலாம்,'' என்றார்.வார்டு வாரியாக முகாம்ஆதார் சார்ந்த தேவை என்பது, அத்தியாவசியமாகி விட்ட நிலையில், வார்டு வாரியாக சிறப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யலாம். புதிய ஆதார் அட்டை பெறுவது, திருத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் மக்கள், முதல் முறை பதிவு செய்யும் போதே, பிழையின்றி சரியான விவரங்களை வழங்கி, ஆதார் அட்டையை பெற்று கொள்வதன் மூலம். இதுபோன்ற பண விரயத்தை தவிர்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X