எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நீர் இருப்பு 36.63 டி.எம்.சி.,யாக சரிவு! சம்பா சாகுபடிக்கு கைகொடுக்குமா பருவமழை?

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மேட்டூர் ;மேட்டூர் அணை நீர் இருப்பு, 36.63 டி.எம்.சி.,யாக சரிந்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க, பருவமழை கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார் உட்பட 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் சாகுபடி
மேட்டூர் நீர்,36.63 டி.எம்.சி, சரிவு  சம்பா சாகுபடி,பருவமழை?

மேட்டூர் ;மேட்டூர் அணை நீர் இருப்பு, 36.63 டி.எம்.சி.,யாக சரிந்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க, பருவமழை கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார் உட்பட 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.


டெல்டா பாசனம்



டெல்டா பாசனத்திற்காக, ஜூன் 12ல் நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்த நிலையில், தற்போது விவசாயிகள், 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியை துவங்கியுள்ளனர்.தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம், 74.42 அடி. நீர் இருப்பு 36.62 டி.எம்.சி.,யாக உள்ளது. சம்பா சாகுபடி துவங்கிய நிலையில், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால், பாசனத்திற்கு 5,000 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மூன்றாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க வேண்டும். ஒருவேளை பருவமழை தீவிரம் குறைந்தால், வரும் டிசம்பர் வரை தினமும் குறைந்தபட்சம், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், தினமும் 1 டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும். தினமும் 1 டி.எம்.சி., திறந்தால், இருப்பு நீரை ஒரு மாதத்திற்கு மட்டுமே திறக்க முடியும்.நீரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றால், நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா தந்தாக வேண்டும். ஆனால், ஏற்கனவே செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய, 33 டி.எம்.சி., நீரையே கர்நாடகா நிலுவை வைத்துள்ளது.




கர்நாடகா பிடிவாதம்



அந்த நீரை வழங்கினால் கூட, தொடர்ச்சியாக பாசனத்திற்கு நீர் திறந்து, சம்பா சாகுபடிக்கு நீர் திறக்க முடியும்.கர்நாடகா நீர் வழங்காமலும், வடகிழக்கு பருவமழை கைகொடுக்காத நிலை ஏற்பட்டாலும், சம்பா சாகுபடி பாதிக்கப்படும்.இது குறித்து, த.மா.கா., விவசாயிகள் அணி மாநில தலைவர் ரங்கராஜன் கூறியதாவது:மேட்டூர் அணையில்திறக்கப்பட்ட தண்ணீர், இன்னமும் கடைமடை பகுதியை சென்றடையவில்லை. இதனால், திருவாரூர், கடலுார், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நிலத்தை உழுது, நாற்று நடவு செய்ய முடியவில்லை.டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடைமடை விவசாயிகள், நிலத்தில் விதைகளை துாவி, நேரடி சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஏரி, கால்வாய், ஆறுகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளால், ஒவ்வொரு ஆண்டும் கடைமடையை தண்ணீர் சென்றடைவதில்லை. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே தண்ணீர் கடைமடைக்கு செல்லும். விவசாயிகளும் நெல் விதை துாவுவதற்கு பதிலாக, நாற்று நட்டு நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202109:45:32 IST Report Abuse
duruvasar நீர்வளத்துறை அமைச்சர் குடிநீர் கம்பனி வைத்திருப்பதால் அவர் குடிநீர் பிரச்சனையை தீர்த்து விடுவார். ஆகவே அவர் குடிநீர் பண்ணைகளுக்கு தண்ணீர் வரத்தை உறுதி செய்யுங்கள் முதல்வரே. விவசாயிகள் விஷயம் 2023 கடைசியில் கையிலெடுத்தால் போதுமானது. குடிநீர் என்பது அன்றாட பிரச்சனை.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
05-அக்-202102:49:46 IST Report Abuse
John Miller தமாகா தலைவர் வாசன் சொன்னா அவர் மோடியிடம் சொல்லி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விட வேண்டும் என சொல்ல மாட்டாரா? நீர்நிலைகளை ஆக்கிரமித்து அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் கூட்டணியில் இருந்தவர்கள் தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X