பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவிங் 'லைசன்ஸ்' வேணுமா... 'நீச்சல்' தெரிஞ்சிருக்கணும்!

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக பயிற்சி மைதானத்துக்கு செல்லும் வழியில், மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள், தண்ணீரில் தத்தளித்து, கடந்து செல்ல வேண்டியுள்ளது.திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலக பயிற்சி மைதானம், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் உள்ளது. அலுவலகத்தில் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர், எல்.எல்.ஆர்., ஏற்றுக்கொண்ட பின், பைக்கில் 'எட்டு'
 டிரைவிங் 'லைசன்ஸ்' வேணுமா...  'நீச்சல்' தெரிஞ்சிருக்கணும்!

திருப்பூர்:திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக பயிற்சி மைதானத்துக்கு செல்லும் வழியில், மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள், தண்ணீரில் தத்தளித்து, கடந்து செல்ல வேண்டியுள்ளது.திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலக பயிற்சி மைதானம், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் உள்ளது. அலுவலகத்தில் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர், எல்.எல்.ஆர்., ஏற்றுக்கொண்ட பின், பைக்கில் 'எட்டு' போட்டு காண்பிக்க அணைப்பாளையம் செல்கின்றனர்.காலேஜ் ரோட்டில் இருந்து பயிற்சி மைதானத்துக்கு செல்லும் வழியில் ரயில் பாலத்தை கடக்க வேண்டியுள்ளது.

கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளது. தண்ணீர் வழிந்தோட வழியின்றி, 30 மீட்டர் துாரத்துக்கு மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகளால், அதனை கடந்த செல்ல முடியவில்லை.எட்டு போட பயிற்சி மைதானத்துக்கு செல்ல இந்த ஒரு வழி மட்டும் இருப்பதால், தண்ணீரில் ஊர்ந்து, மிதந்து தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. சிலர் தண்ணீரில் தடுமாறி விழுகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில்,'பதிவு எண் கூட பெறாத புதிய வாகனங்களை சேறும், சகதியுமாக உள்ள இந்த வழியில் ஓட்டி செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகளும் இதன் வழியே தான் செல்கின்றனர். மழைநீர் வெளியேற வழி ஏற்படுத்தி, மீண்டும் தேங்காமல் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X