சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சண்டையை தடுக்க முயன்றவர் தலையில் அடிபட்டு மரணம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : சண்டையை தடுக்க முயன்ற இளைஞரை தள்ளிவிட்டதில், தலையில் அடிபட்டு அவர் மரணமடைந்தார்.காஞ்சிபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் மோகன், 25. இவரது நண்பர் சத்யா நகர் பாலாஜி, 24. சத்யா நகரில் வசிக்கும் கார்த்திகேயன், 40, என்பவரின் மகனை பாலாஜி அடித்ததாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு, பாலாஜி, மோகன் சேர்ந்து மது அருந்தி, வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். இதை

காஞ்சிபுரம் : சண்டையை தடுக்க முயன்ற இளைஞரை தள்ளிவிட்டதில், தலையில் அடிபட்டு அவர் மரணமடைந்தார்.

காஞ்சிபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் மோகன், 25. இவரது நண்பர் சத்யா நகர் பாலாஜி, 24. சத்யா நகரில் வசிக்கும் கார்த்திகேயன், 40, என்பவரின் மகனை பாலாஜி அடித்ததாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு, பாலாஜி, மோகன் சேர்ந்து மது அருந்தி, வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். இதை பார்த்த கார்த்திகேயன், உறவினர் பூபாலன், 35, என்பவருடன் சென்று, பாலாஜியை வழிமறித்து, 'என் மகனை எதற்கு அடித்தாய்' கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பாலாஜியை அடித்தனர்.சண்டையை தடுத்த மோகனை, அவர்கள் தள்ளி விட்டதில் மோகனின் பின் மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து கார்த்திகேயன், '108' ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் இறந்தார். பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திகேயன், பூபாலனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X