பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் தலைமையில் கிராமசபா கூட்டம்: மாதப்பூர் ஊராட்சி மக்கள் வேண்டுகோள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொதுமக்கள் கோரிக்கையை ஏற்காததால், கலெக்டர் தலைமையில் மீண்டும் கிராமசபா கூட்டம் நடத்த வேண்டுமென, மாதப்பூர் ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வாசுகி, கலெக்டரின் நேர்முக
 கலெக்டர் தலைமையில் கிராமசபா கூட்டம்: மாதப்பூர் ஊராட்சி மக்கள் வேண்டுகோள்

திருப்பூர்:பொதுமக்கள் கோரிக்கையை ஏற்காததால், கலெக்டர் தலைமையில் மீண்டும் கிராமசபா கூட்டம் நடத்த வேண்டுமென, மாதப்பூர் ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வாசுகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது ஆகியோர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இம்மானுவேல் உள்ளிட்டோர் கொடுத்த மனு: அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., ஸ்டாப்பில், பஸ்கள் முறையாக நின்று செல்வதில்லை; நிற்காமல் செல்வதால், பயணிகள் பாதிக்கின்றனர். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளாக, குண்டும் குழியுமாக உள்ள கோர்ட் வீதி ரோட்டை வேண்டும். இந்திய குடியுரிமை கட்சி மாநகர பொறுப்பாளர் ஆனந்தன்: கே.வி.ஆர்., நகர், ஜீவா நகர், பெரியார்நகர், அண்ணா நகர் பகுதிக்கான, அங்கன்வாடி மையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

புதிய கட்டடம் கட்டி, போதுமான தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். பொங்கலுார் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சி மக்கள்: பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கையை, கிராமசபா கூட்டத்தில் முன்வைத்தும், ஊராட்சி தலைவர் தீர்மானம் இயற்றி கொடுக்கவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காததால், கலெக்டர் தலைமையில் மீண்டும் கிராமசபா கூட்டம் நடத்தி, கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்த மேகநாதன்: அரசுக்கு சொந்தமான நிலத்தை, தனியார் அமைப்புக்கு வழங்கியது தெரியவந்துள்ளது. அரசு நில ஆக்கிரமிப்பை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும். அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைப்பை தடை செய்ய வேண்டும். பெண் தர்ணா: பாண்டியன் நகரை சேர்ந்த சந்தியா, 28 என்ற பெண், கலெக்டர் அலுவலக தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். தனது கணவர் சங்காரம், தன்னை ஏமாற்றி, மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமெனவும் மனு கொடுத்தார்.ஒரே நாளில்1,113 மனுக்கள்நேற்றைய முகாமிலும், இலவச வீட்டுமனை, அடுக்குமாடி வீடு கேட்டு, நுாற்றுக்கணக்கான மக்கள் மனு கொடுத்தனர். நேற்று மட்டும், அடுக்குமாடி வீடு கேட்டு, 420 பேர், வீட்டுமனை பட்டா கேட்டு, 484, இதர கோரிக்கைக்கு, 209 என, 1,113 பேர் மனு கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X