சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: வாலிபர் தற்கொலை

Added : அக் 04, 2021
Share
Advertisement
பொங்கலுார் அருகே கரியாம்பாளையம் ஏ.டி., காலனியை சேர்ந்த அய்யாவு மகன் சூரியபிரகாஷ், 20; பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது தாய் ஒரு மாதம் முன்பு இறந்து விட்டார். குடிப்பழக்கம் உடைய அவர் தன் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். தாய் இறந்ததாலும், குடிக்க பணம் கிடைக்காததாலும் விரக்தியடைந்த, வீட்டில் சேலையில்

பொங்கலுார் அருகே கரியாம்பாளையம் ஏ.டி., காலனியை சேர்ந்த அய்யாவு மகன் சூரியபிரகாஷ், 20; பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது தாய் ஒரு மாதம் முன்பு இறந்து விட்டார். குடிப்பழக்கம் உடைய அவர் தன் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். தாய் இறந்ததாலும், குடிக்க பணம் கிடைக்காததாலும் விரக்தியடைந்த, வீட்டில் சேலையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி, தண்டல்காரர் பலி

பல்லடம் அருகே மாதப்பூர் - சிங்கனுாரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 45. சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக (தண்டல்காரர்) பணியாற்றுகிறார். நேற்று மதியம், தனது டூவீலரில் - மாதப்பூர் செல்கையில், எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு, மஞ்சு என்ற மனைவி உள்ளார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X