சில வரி செய்திகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
'நீட்' வழக்கு: ரூ. 5 லட்சம் அபராதம்? புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்., 12ல் நடந்தது. 'ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அதில் பங்கேற்ற சலோனி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்,
 சில வரி செய்திகள்

'நீட்' வழக்கு: ரூ. 5 லட்சம் அபராதம்?

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்., 12ல் நடந்தது. 'ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அதில் பங்கேற்ற சலோனி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தேர்வு ரத்தானால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என்றனர். மேலும், இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக தெரிவித்த நீதிபதிகள், பின், எச்சரிக்கை மட்டும் விடுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

நடிகை கணவர் மீது வழக்கு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியரும், நடிகை ஷபானா ஆஸ்மியின் கணவருமான ஜாவேத் அக்தர், 76, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு எதிரான கருத்துகளை, 'டிவி'யில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு மன்னிப்பு கோரும்படி வழக்கறிஞர் சந்தோஷ் துபே 'நோட்டீஸ்' அனுப்பினார். அக்தர் அதை ஏற்கவில்லை. இதற்கிடையே, சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் அக்தர் மீது போலீசார் நேற்று, கைது செய்ய அவசியமற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

57 வயது யானைக்கு பிரசவம்

போபால்: மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டம் பந்தவ்கர் தேசிய வனவிலங்கு பூங்காவில், 57 வயதான அனார்கலி என்ற யானை உள்ளது. அந்த யானை கர்ப்பம் அடைந்த நிலையில், சமீபத்தில் பெண் குட்டி ஈன்றது. குட்டிக்கு காயத்ரி என பெயரிடப்பட்டு உள்ளது. அனார்கலி இதுவரை எட்டு குட்டிகளை பெற்றெடுத்து உள்ளதாக, வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் கூறினர்.

எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்

'கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றியது தொடர்பாக வகுப்புவாத மோதல்களை துாண்டும் கருத்துகளை, பதிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷெர்மன் அலி அகமது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்த போலீசார், சமீபத்தில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கட்சி விதிகளை தொடர்ந்து மீறியதாக அவர், காங்.,கில் இருந்து நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சிறுமிக்கு சூடு: சித்தி கைது

துவாரகா: குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில், 6 வயது சிறுமியின் தாய் இறந்ததால், தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் லட்டு சாப்பிட்டாக கூறி, அந்த சிறுமிக்கு, சித்தி உடல் முழுதும் சூடு வைத்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார், கொடுமைக்கார சித்தியை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X