பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு பரிசோதனை

Added : அக் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பின், நேற்று அனுமதிக்கப்பட்டனர்.செங்கல்பட்டில் ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முதலாமாண்டு மாணவர்கள், 1,000க்கும்
 செங்கல்பட்டு அரசு கல்லுாரியில்  மாணவர்களுக்கு பரிசோதனை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பின், நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டில் ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முதலாமாண்டு மாணவர்கள், 1,000க்கும் மேற்பட்டோருக்கு சேர்க்கை நடந்தது.இவர்களுக்கான முதலாண்டு வகுப்பு, நேற்று துவங்கியது. ஆர்வத்துடன் வந்த மாணவர்களை கல்லுாரி பேராசிரியர்கள் வரவேற்றனர்.தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர், கொரோனா பரிசோதனை செய்தனர். பின் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.திருத்தணி அரசு கல்லுாரியில் நடப்பாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பில், முதலாம் ஆண்டில், மொத்தம் 858 மாணவ - மாணவியர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் முதுகலை பட்டப்படிப்பில், 350க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு நேற்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.கல்லுாரியில் புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை, முதல்வர் விஜயலட்சுமி மற்றும் துறை பேராசிரியர்கள் வரவேற்று, கல்லுாரியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும், 'வகுப்புகளை 'கட்' அடிக்காமல், மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியை கற்க வேண்டும்' என, அந்தந்த துறை தலைவர்கள் மற்றும் முதல்வர்மாணவர்களுக்கு அறிவுறுத்தி பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X