பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : திருவாலங்காடில் இயங்கும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவாலங்காடில் இயங்கும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தாண்டு டிசம்பர் 3ல் அரவையை துவங்க உள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.இதை கண்டித்து, நவம்பர் 9ல், அரவையை துவங்க வேண்டும். ஆலை சீராக

திருவாலங்காடு : திருவாலங்காடில் இயங்கும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாலங்காடில் இயங்கும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தாண்டு டிசம்பர் 3ல் அரவையை துவங்க உள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.இதை கண்டித்து, நவம்பர் 9ல், அரவையை துவங்க வேண்டும். ஆலை சீராக இயங்க இயந்திரங்களை மாற்ற வேண்டும் உட்பட, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆலை நிர்வாகம் சார்பில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை கரும்பு அலுவலர் அரீஸ் கண்ணா பேச்சு நடத்தினார்.

இதில், உடன்பாடு எட்டப்படவில்லை.வரும், 11ம் தேதிக்குள், ஆலை நிர்வாகம் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது.இதில், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் ஸ்ரீநாத், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X