சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

Added : அக் 04, 2021
Share
Advertisement
பல்லடம்:குட்டைக்குள், கருகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பல்லடம் அருகே அருள்புரம் - பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள குட்டை ஒன்றில், நேற்று கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. சிலர், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணையில்
 கருகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

பல்லடம்:குட்டைக்குள், கருகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பல்லடம் அருகே அருள்புரம் - பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள குட்டை ஒன்றில், நேற்று கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. சிலர், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.போலீசார் கூறுகையில், 'இறந்தது வட மாநில தொழிலாளியின் சடலம் போல் உள்ளது. தலைமீது எரிபொருள் ஊற்றி பற்ற வைத்ததில் உடல் கருகி எரிந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.மோப்ப நாய் அர்ஜூன், சிறிது துாரம் சென்று மீண்டும் அதே இடத்துக்கு திரும்பியது. சடலத்தின் அருகே கிடந்த பாட்டில், மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X