கொரோனா பலிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு" மத்திய அரசு திட்டத்துக்கு கோர்ட் அனுமதி

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி-கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 'இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்' என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கண்டனம்கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை

புதுடில்லி-கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

'இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்' என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கண்டனம்கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கும்படி, என்.டி.எம்.ஏ., எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

செப்., 3ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழிமுறைகள் உருவாக்க அதிக காலம் எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் கடந்த மாத இறுதியில் தன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

முன்னுதாரணம்

மேலும், மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை ஏற்கிறோம்; இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ள, அளித்துள்ள இழப்பீடுகளைத் தவிர, இந்தத் தொகை கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.விளம்பரம்மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து வழங்கலாம்.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். ஆதார் அடிப்படையில் நேரடியாக வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும்.கொரோனாவால் பலியானவர் என, இறப்பு சான்றிதழில் குறிப்பிடாவிட்டாலும், மற்ற ஆவணங்கள் முறைாக இருந்தால், இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணையம் இது தொடர்பாக ஆய்வு நடத்தி, இறப்பு சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பான தகவல்கள் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X