சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பசுமை நந்தவனம் பூக்கட்டும்; மரக்கன்று நட்ட மாணவியர்...

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், திருப்பூர், புனித ஜோசப் மகளிர் கல்லுாரி மாணவியர்களுடன் இணைந்து, நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்களில், அரியவகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. ஏழாவது திட்டத்தில் இதுவரை, 1.05 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புனித ஜோசப் மகளிர் கல்லுாரியின்,
 பசுமை நந்தவனம் பூக்கட்டும்; மரக்கன்று நட்ட மாணவியர்...

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், திருப்பூர், புனித ஜோசப் மகளிர் கல்லுாரி மாணவியர்களுடன் இணைந்து, நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்களில், அரியவகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. ஏழாவது திட்டத்தில் இதுவரை, 1.05 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புனித ஜோசப் மகளிர் கல்லுாரியின், சுற்றுச்சூழல் மன்றத்துடன் இணைந்து, முதலிபாளையம் ஊராட்சியில் நேற்று மரக்கன்று நடப்பட்டது.சுற்றுச்சூழல் மன்றத்தின், வனவிலங்கு வாரத்தின் ஒரு பகுதியாக, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நேற்று, முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்காபுரம் கிராமத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட அலுவலர் குமார், ஊராட்சி தலைவர் மயூரிபிரியா, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் நடராஜன், புனித ஜோசப் கல்லுாரி முதல்வர் மேரி ஜோஸ்பின், செயலாளர் குழந்தை தெரஸ் ஆகியோர் மாணவியருடன் இணைந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X