அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்-மருத்துவத் துறையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற
 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்-மருத்துவத் துறையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று முதல் துவங்கின. முதல் நாளன்று, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உடலை தொடாமலேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விபரங்களை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், 65, மற்றும் ஆர்டெம் பட்டபவுஷியன், 53, ஆகிய இருவருக்கு, நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் உணர்வு உள்ளிட்டவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகள் குறித்து தெளிவுபடுத்துவதுடன், நீண்ட நாள் வலி உட்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X