பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... பஸ் நின்று செல்ல மனு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஹானஸ்ட் கன்ஸ்யூமர் புரடெக் ஷன் அமைப்பு சார்பில், போக்குவரத்து டிப்போ மேலாளருக்கு அனுப்பிய மனுவில்,'புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பி.என்., ரோடு வழியாக பெருமாநல்லுார் செல்லும் பஸ்கள் ஸ்டாப்பில் சரிவர நிற்பதில்லை. கூத்தம்பாளையம், கணக்கம்பாளையம், பாண்டியன்நகரில் நிற்காது என நடத்துனர் கூறுகின்றனர். பள்ளி மாணவர் சென்று வர சிரமம் ஏற்படுவதால், அனைத்து ஸ்டாப்புகளில் டவுன்
 சில வரி செய்திகள்... பஸ் நின்று செல்ல மனு

ஹானஸ்ட் கன்ஸ்யூமர் புரடெக் ஷன் அமைப்பு சார்பில், போக்குவரத்து டிப்போ மேலாளருக்கு அனுப்பிய மனுவில்,'புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பி.என்., ரோடு வழியாக பெருமாநல்லுார் செல்லும் பஸ்கள் ஸ்டாப்பில் சரிவர நிற்பதில்லை. கூத்தம்பாளையம், கணக்கம்பாளையம், பாண்டியன்நகரில் நிற்காது என நடத்துனர் கூறுகின்றனர். பள்ளி மாணவர் சென்று வர சிரமம் ஏற்படுவதால், அனைத்து ஸ்டாப்புகளில் டவுன் பஸ்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பிறந்த நாள் விழா
திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை மற்றும் தென்னிய செங்குந்தர் மகாஜனசங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் 'ஆண்டவர்' ராமசாமி, சீனிவாசன், வேலுசாமி, நாராயணமூர்த்தி, தெய்வ சிகாமணி, பாலசுப்பிரமணி, ரமேஷ் உள்ளிட்டோர், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் மரியாதை செலுத்தனர். உதயநிதி மக்கள் நல மன்றம் சார்பில், குமரன் பிறந்த நாளை முன்னிட்டு, விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு, தான்றிக்காய் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், குமரன் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பொது செயலாளர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் கலையரசன், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், குமரன் 118 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் கோபால் மற்றும் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் குமரன் உருவப்படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப் தலைமை வகித்தார்.

கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.காந்தி ஜெயந்தி விழாதிருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள். காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி ராஜிவ் பவனில் கொண்டாடப்பட்டது. காந்தி நகரில், காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள சர்வோதயா சங்க வளாகத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அனுப்பர்பாளையம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X