பெண் மர்ம மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் மர்ம மரணம்

Added : அக் 04, 2021
Share
காஞ்சிபுரம் : அண்ணன், தம்பி சண்டை காரணமாக மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என, காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.காஞ்சிபுரம் திருக்காலிமேடு கே.டி.எஸ்., தெருவைச் சேர்ந்தவர் சங்கர், அவர் மனைவி புஷ்பலதா, 26. இரு குழந்தைகள் உள்ளன. இவர்கள், அண்ணன் சத்யா குடும்பத்தினர், அப்பா, அம்மாவுடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர்.நேற்று முன்தினம், சங்கருக்கும், சத்யா

காஞ்சிபுரம் : அண்ணன், தம்பி சண்டை காரணமாக மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என, காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு கே.டி.எஸ்., தெருவைச் சேர்ந்தவர் சங்கர், அவர் மனைவி புஷ்பலதா, 26. இரு குழந்தைகள் உள்ளன. இவர்கள், அண்ணன் சத்யா குடும்பத்தினர், அப்பா, அம்மாவுடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர்.நேற்று முன்தினம், சங்கருக்கும், சத்யா அண்ணனுக்கும், குடி போதையில் சண்டை நடந்துள்ளது. இதில் சங்கரின் கையில் காயம் ஏற்பட்டது.இதை பார்த்த புஷ்பலதா, கணவனின் அண்ணனிடம் 'என் கணவரை ஏன் அடித்தீர்கள்' என சண்டையிட்டுள்ளார். அதற்கு, 'அண்ணன் தம்பி சண்டையில் நீ தலையிடாதே' எனக்கூறி, அவர் கடுமையாக திட்டியுள்ளார்.

பின் சத்யா, தம்பி சங்கரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சங்கர் அறைக்கு சென்று பார்த்தபோது, மனைவி புஷ்பலதா துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.சகோதரர்கள் சண்டை காரணமாக மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என, சந்தேக மரணம் என வழக்கு பதிந்து, காஞ்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X