பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மானியம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில், வேளாண் துறையின் சார்பில், நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் வேதவள்ளி பேசியதாவது:நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ், 40 விவசாயிகளுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழை துாவன் ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.சிறு, குறு
 சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மானியம்

திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில், வேளாண் துறையின் சார்பில், நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் வேதவள்ளி பேசியதாவது:நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ், 40 விவசாயிகளுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழை துாவன் ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

கரும்புக்கு சொட்டு நீர், பயிறு வகைகளான வேர்க்கடலை, உளுந்து, பச்சை பயிறு ஆகியவற்றுக்கு தெளிப்பு நீர் மற்றும் மழை துாவன் பெறலாம்.இத்திட்டத்தில் பயன் அடைய விரும்பும் விவசாயிகள், அந்தந்த வேளாண் உதவி அலுவலர் அல்லது உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X