சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கழுத்து நெரித்து கொலை

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்;குடும்ப பிரச்னையில், மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை, காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், பாண்டியன்
 மனைவி கழுத்து நெரித்து கொலை

திருப்பூர்;குடும்ப பிரச்னையில், மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை, காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், பாண்டியன் நகர், பண்ணாரியம்மன் நகரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம், வெளியே சென்று விட்டு தம்பதியர் வீட்டுக்கு திரும்பினர்.வெகு நேரமாக வீட்டு கதவு திறக்காத காரணத்தால், அக்கம்பக்கத்தினர் வீட்டை சென்று பார்த்தனர். வீட்டுக்குள் வைஷ்ணவி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர்.கணவருக்கு வலைஇதுகுறித்து போலீசார் கூறியதாவது.தம்பதியர் மத்தியில், அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. அதேநேரத்தில், மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, சொந்த ஊருக்கு அருண்குமார் சென்று விடுவது வழக்கம்.மீண்டும் பிரச்னை ஏற்பட, மனைவி கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி சென்றார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X