பொது செய்தி

இந்தியா

உலகம் சுற்றும் கேரள தம்பதி ரஷ்ய பயணத்துக்கு தயார்

Updated : அக் 05, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொச்சி :உலகைச் சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த தம்பதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த, கே.ஆர். விஜயன், 71, மற்றும் அவரது மனைவி மோகனா, 69, ஆகியோர் டீக்கடை நடத்தி வருகின்றனர்.உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற ஆசையில், பல நாடுகளுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007ல் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக
 உலகம் சுற்றும் கேரள தம்பதி, ரஷ்ய பயணத்துக்கு தயார்

கொச்சி :உலகைச் சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த தம்பதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த, கே.ஆர். விஜயன், 71, மற்றும் அவரது மனைவி மோகனா, 69, ஆகியோர் டீக்கடை நடத்தி வருகின்றனர்.உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற ஆசையில், பல நாடுகளுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2007ல் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்கு சென்றனர். அதன் பின் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, எகிப்து, அமெரிக்கா என 25 நாடுகளுக்கு இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் வெளிநாட்டு பயணியருக்கு தடை விதித்துள்ளன.

அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளாமல் இருந்த அவர்கள், வரும் 21ம் தேதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.டீக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்தும், கடன் வாங்கியும், இந்த தம்பதி உலகம் சுற்றி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
05-அக்-202119:09:25 IST Report Abuse
THINAKAREN KARAMANI டீக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் எப்படி லட்சக்கணக்கில் சேர்த்து வைத்து உலக நாடுகளுக்கு போய் வரமுடியும்? வெளிநாட்டில் செலவுகளுக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்? டீக்கடையில் அவ்வளவு வருமானமா வரும்? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
05-அக்-202118:19:40 IST Report Abuse
jagan இப்பவே கடன் வாங்கி சுத்தணுமா? 4K சுற்றுலா வீடியோ கொட்டி கிடடக்கு 75 இல்ல 85 இன்ச் டிவி வாங்கினா போதும். தினம் ஒரு நாடு பாக்கலாம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
05-அக்-202116:40:28 IST Report Abuse
Vena Suna வயதான காலத்தில் உடம்பு சரி இல்லாமல் போனால் வைத்தியத்திற்கு நிறைய தேவைப்படலாம். சேர்த்து வையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X