கவுன்சிலர்கள் கட்சியின் சாதனை துண்டுபிரச்சாரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்கள் கட்சியின் சாதனை துண்டுபிரச்சாரம்

Added : அக் 04, 2021
Share
உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தலைமை ஆலோசனைப்படி, கட்சியின் சாதனைகளில் சிலவற்றை துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் பட்டதாரி வேட்பாளர்கள் சிலர், தேர்தல் வாக்குறுதிகளை தாங்களாவே எழுதி தயாரித்து, தேர்தல் அறிக்கையை துண்டு

உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தலைமை ஆலோசனைப்படி, கட்சியின் சாதனைகளில் சிலவற்றை துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் பட்டதாரி வேட்பாளர்கள் சிலர், தேர்தல் வாக்குறுதிகளை தாங்களாவே எழுதி தயாரித்து, தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக வெளியிட்டுள்ளனர்.அரசியல் அனுபவம், அதிகம் படிக்காத பல வேட்பாளர்கள், தங்கள் வாக்குறுதிகளை மக்களுக்கு தெரியப்படுத்த கல்லுாரி மாணவர்கள், அச்சகங்களின் உதவிகளை நாடியுள்ளனர்.தனக்கு தெரிந்தவர்களிடம் அலசி ஆராயந்து, நன்கு தமிழ் படித்த மாணவர்களிடம் சென்று, ஒரு தேர்தல் அறிக்கையை தயார் செய்ய, குறிப்பிட்ட தொகையை தருகின்றனர்.ஊராட்சியின் அடிப்படை, அவசிய தேவைக்கேற்ற வாக்குறுதிகளை யோசித்து சேர்க்க சொல்வது, அதை கவர்ச்சிகரமாக எழுதுவது, ஒற்றுப்பிழை, சந்தி பிழையின்றி தெளிவாக எழுதுவது என கேட்டு வாங்குகின்றனர்.

இதனால் தமிழ் படித்த மாணவர்களுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது.தேர்தல் பரபரப்பால் அச்சகத்திலும் தேர்தல் அறிக்கையை பிழையின்றி தயார் செய்வதற்கென, நன்கு தமிழ் படித்தவர்களை தற்காலிக பணிக்கு நியமித்துள்ளனர்.அவ்வாறு பெறப்பட்ட வாக்குறுதிகளை, கணினி மையங்களில் கொடுத்து, பல வண்ணங்களில் பல டிசைன்களில் துண்டு பிரசுரம், போஸ்டர் அடித்து அனைவருக்கும் தருகின்றனர்.தேர்தலுக்கு 'வாய்' மட்டும் இருந்தால் போதும் என்பதால், மற்றவற்றை காசு கொடுத்து வாங்கி கொள்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X