பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் ஒரு வாரம் ஒருங்கிணைப்பு பயிற்சி

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை-கலை, அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் ஒரு வாரத்துக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால், கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லுாரிகளில் முதலாம்ஆண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள்
 கல்லுாரிகளில் ஒரு வாரம் ஒருங்கிணைப்பு பயிற்சி

சென்னை-கலை, அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் ஒரு வாரத்துக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால், கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லுாரிகளில் முதலாம்ஆண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.இந்நிலையில், நேற்று முதல் கலை, அறிவியல் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.

அரசு மற்றும் தனியார் மகளிர் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவியரை பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.மாணவர் கல்லுாரிகளில் கோஷ்டி மோதல் மற்றும்,'ராகிங்' பிரச்னை ஏற்படாமல், பேராசிரியர்களே வாசலில் நின்று, புதிய மாணவர்களை வரவேற்றனர்.இதற்கிடையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பாடங்கள் இல்லாமல், ஒரு வாரத்துக்கு உயர் கல்விக்கான முன்தயாரிப்பு குறித்த ஒருங்கிணைப்பு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

அதாவது. பள்ளிகளில் படித்த முறைக்கும், கல்லுாரிகளில் படிக்க போகும் முறைக்கும் உள்ள வித்தியாசம்; உயர் கல்வி கற்பித்தல் முறையை புரிந்து கொள்ளுதல் குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டல் வகுப்புகள் நடத்தப்படும் என்று, கல்லுாரி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X