பொது செய்தி

தமிழ்நாடு

நெல் குவியலில் டூ - வீலர் மோதி புது மாப்பிள்ளை பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
மப்பேடு : நெடுஞ்சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுஇருந்த நெல் குவியலில் டூ - வீலர் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை இறந்தார்.மப்பேடு அடுத்த, கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் விநாயகம், 34. இவருக்கு, இதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன், வரும் 28ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு, நண்பர் கிளமண்ட்

மப்பேடு : நெடுஞ்சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுஇருந்த நெல் குவியலில் டூ - வீலர் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை இறந்தார்.

மப்பேடு அடுத்த, கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் விநாயகம், 34. இவருக்கு, இதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன், வரும் 28ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு, நண்பர் கிளமண்ட் என்பவருடன், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் பேரம்பாக்கம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பேரம்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடை அருகே வந்த போது நெடுஞ்சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் நிலை தடுமாறி விழுந்தார்.இதில், தலையில் படுகாயமடைந்த விநாயகம், பேரம்பக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப்பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். கிளமண்ட் சிறு காயங்களுடன் தப்பினார்.இதுகுறித்து மணி அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X