நில அளவை வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குவது துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நில அளவை வரைபடங்களை 'டிஜிட்டல்' மயமாக்குவது துவக்கம்

Added : அக் 04, 2021
Share
சென்னை-நில அளவை வரைபடங்களை, பொதுமக்கள் ஆன்லைன் வழியாக எளிதில் பார்க்கும் வகையில், புதிய சாப்ட்வேரை பயன்படுத்தி, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணியை வருவாய் துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில், நிலங்களின் பட்டா, அ - பதிவேடு, நகர்ப்புற நில அளவை விபரங்கள் ஆகியவற்றை, ஆன்லைன் முறையில் மக்கள் எளிதாக பார்க்க, வருவாய் துறை தனி இணையதளத்தை துவக்கி உள்ளது. அதில், மாவட்டம், வட்டம்,

சென்னை-நில அளவை வரைபடங்களை, பொதுமக்கள் ஆன்லைன் வழியாக எளிதில் பார்க்கும் வகையில், புதிய சாப்ட்வேரை பயன்படுத்தி, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணியை வருவாய் துறை துவக்கி உள்ளது.

தமிழகத்தில், நிலங்களின் பட்டா, அ - பதிவேடு, நகர்ப்புற நில அளவை விபரங்கள் ஆகியவற்றை, ஆன்லைன் முறையில் மக்கள் எளிதாக பார்க்க, வருவாய் துறை தனி இணையதளத்தை துவக்கி உள்ளது. அதில், மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு போன்ற தகவல்களை அளித்தால் பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றை பார்க்க முடியும். தற்போது, இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக, மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண புதிய வழிமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.

வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது செயல்பாட்டில் உள்ள இணையதளத்தில், நில அளவை வரைபடங்களை, டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்வதில், சில சிக்கல்கள் உள்ளன. அதற்கு தீர்வாக, 'கொலாப் லேண்ட்' என்ற புதிய சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கி உள்ளோம்.இதில், ஒரு சர்வே எண்ணை தேர்வு செய்தால், அதன் மொத்த பரப்பளவு; அங்கீகரிக்கப்பட்ட உட்பிரிவுகளும் இருக்கும். இந்த வரைபடங்களை தேவைக்கு ஏற்ப பெரிதாக்கி, டிஜிட்டல் வடிவத்திலேயே பயன்படுத்தலாம்.கிராமங்கள் வாரியாக நில அளவை வரைபடங்களை, டிஜிட்டல் மயமாக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.

நகர்ப்புற நில அளவை வரைபடங்களையும், இதில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.வரைபடத்தில் உள்ள நிலம் எங்கு உள்ளது என்பதற்கான, புவி சார் தகவல்களும் கிடைக்கும் என்பதால், மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X