பொது செய்தி

தமிழ்நாடு

7.5 சதவீத ஒதுக்கீட்டில் 'சீட்'டா? கட்டணம் வசூலிக்க தடை!

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை-'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 'சீட்'கள் பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, தனியார் கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி

சென்னை-'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 'சீட்'கள் பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, தனியார் கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடுஅடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், கவுன்சிலிங் கட்டணம்,விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களிடம், கட்டணம் செலுத்துமாறு, பல கல்லுாரிகள் வற்புறுத்தியதாக மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது.

இதையடுத்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் இருந்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்,இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்றுள்ளது. எனவே, அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X