சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை--வெளிநாட்டில் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்து சென்னை திரும்பிய, ஆந்திராவைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.துபாயில் இருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம், சென்னைக்கு நேற்று காலை வந்தது. அதில் வந்த, ஆந்திரா மாநிலம் சித்துாரைச் சேர்ந்த கோபிநாத், 39 என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, ஆந்திர

சென்னை--வெளிநாட்டில் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்து சென்னை திரும்பிய, ஆந்திராவைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம், சென்னைக்கு நேற்று காலை வந்தது. அதில் வந்த, ஆந்திரா மாநிலம் சித்துாரைச் சேர்ந்த கோபிநாத், 39 என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யால், மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி, அவர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து, கோபிநாத்தை வெளியே விடாமல், குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். துபாயில் வேலை செய்து விட்டு, சொந்த ஊர் திரும்பி வருவதாகவும், தன் மேல் புகார் எதுவும் இல்லை என்றும், அவர் கூறினார்.

ஆனால், தொடர் விசாரணையில், 2018ல், நெல்லுார் போலீசில், கோபிநாத் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவானது தெரிய வந்தது. உடன், கோபிநாத் சிக்கியவிபரத்தை, நெல்லுார் போலீஸ் எஸ்.பி.,க்கு, குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சென்னை வந்து, கோபிநாத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X