பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய சிலம்ப போட்டி 

Added : அக் 04, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி, : தேசிய சிலம்ப போட்டிகளில், தங்கப்பதக்கங்கள் வென்ற, 7 மாணவ - மாணவியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.இந்திய சிலம்பம் சமமேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட அசோசியேஷன் இணைந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த, விளாப்பாக்கம் பகுதியில், கடந்த வாரம், தேசிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தின.அதில், 22 மாநிலங்களை சேர்ந்த, 500 போட்டியாளர்கள்
 தேசிய சிலம்ப போட்டி 

கும்மிடிப்பூண்டி, : தேசிய சிலம்ப போட்டிகளில், தங்கப்பதக்கங்கள் வென்ற, 7 மாணவ - மாணவியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்திய சிலம்பம் சமமேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட அசோசியேஷன் இணைந்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த, விளாப்பாக்கம் பகுதியில், கடந்த வாரம், தேசிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தின.அதில், 22 மாநிலங்களை சேர்ந்த, 500 போட்டியாளர்கள் பங்கேற்றனர், எடை மற்றும் வயது வாரியாக, ஆண்கள், பெண்கள் என, தனித்தனியாக, போட்டிகள் நடத்தப்பட்டன.அந்த போட்டிகளில், கும்மிடிப்பூண்டி டி.கே.முத்துராமலிங்கம் சிலம்ப கலைக்கூடத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில், எஸ்.அரவிந்தன், 20, வி.சரண்யா, 19, ஆர்.ஜெகன், 16, எம்.திவ்யபாரதி, 15, எஸ்.இந்துமதி, 15, ப.யுகேஷ், 15, வி.மிதுன்சாய், 14,ஆகிய ஏழு பேர், அவரவர் வயது மற்றும் எடை பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X