அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் முன் காங்., இன்று ஆர்ப்பாட்டம்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'பிரியங்கா கைது சம்பவத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகங்கள் முன், காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உ.பி.,யில், தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டி வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில், நான்கு
 கலெக்டர் அலுவலகம் முன் காங்., இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை-'பிரியங்கா கைது சம்பவத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகங்கள் முன், காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உ.பி.,யில், தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டி வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்தனர். விவசாயிகள் மீது போலீஸ் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு பேர் இறந்தனர். விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்., பொதுச் செயலர் பிரியங்காவை, உ.பி., எல்லையில் தடுத்து கைது செய்த போலீசார், காவலில் வைத்துள்ளனர்.

இதை கண்டித்து, கலெக்டர் அலுவலகங்கள் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.உருவ பொம்மை எரிப்பு சென்னை சத்தியமூர்த்திபவனில், இளைஞர் காங்., தலைவர் ஹசன்மவுலானா எம்.எல்.ஏ., தலைமையிலும்; அண்ணாசாலையில் மகளிர் காங்., தலைவர் சுதா ராமகிருஷ்ணன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையிலும், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம், தனித்தனியாக நடந்தது உ.பி., முதல்வர் யோகி ஆதித்தியநாத் உருவ பொம்மையை, இளைஞர் காங்கிரசார் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-அக்-202123:47:18 IST Report Abuse
Bhaskaran மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் என்றால் ஏதேனும் அர்த்தம் இருக்கும் .தன ஒரு அதிபுத்திசாலி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த மாமேதை அழகிரியின் சேவை டெல்லி காங்கிரஸுக்கு கண்டிப்பாக தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X