நெல் கொள்முதல் விலை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் விலை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Added : அக் 04, 2021
Share
சென்னை-'நெல் கொள்முதல் தொகையை, விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

சென்னை-'நெல் கொள்முதல் தொகையை, விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதீன்.வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாதுரை, நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் ராஜாராமன் மற்றும் பங்கேற்றனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு, செப்., 30 வரை, 44.90 லட்சம் டன் நெல், வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இப்பருவத்தில் 12.50 லட்சம் டன், கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அக்., 1 முதல் துவங்கிய காரிப் பருவத்தில், 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 608 நிலையங்கள் தான் திறக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நிலையங்கள் அமைக்கவும், நடமாடும் நிலையங்கள் வழியாக கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத அளவிற்கு, இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும், டெல்டா மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இதனால், நெற்பயிர்களும், நெல் மூட்டைகளும் ஈரம் அடைந்துள்ளன. எனவே, கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்த, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணத்தை, விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்டங்களுக்கு சென்று, கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X