பொது செய்தி

தமிழ்நாடு

உப்பு தந்தவன் தேர்தலில் இது புதுமொழி!

Added : அக் 04, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் ஒன்றியம் திருவானைக்கோவில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களில் ஒரு வேட்பாளர், வித்தியாசமான பிரசாரத்தை நேற்று மேற்கொண்டார்.ஒவ்வொரு வீட்டிற்கும் 25 கிலோ அரிசி சிப்பம் ஒன்றும், உப்பு பாக்கெட் ஒன்றையும் வழங்கிய அவர், 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற பழமொழிக்கு ஏற்ப, 'சென்டிமென்ட்' ஆக அவற்றை வினியோகித்தார்.'கை நீட்டி அரிசியும்,


உத்திரமேரூர் ஒன்றியம் திருவானைக்கோவில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களில் ஒரு வேட்பாளர், வித்தியாசமான பிரசாரத்தை நேற்று மேற்கொண்டார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 25 கிலோ அரிசி சிப்பம் ஒன்றும், உப்பு பாக்கெட் ஒன்றையும் வழங்கிய அவர், 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற பழமொழிக்கு ஏற்ப, 'சென்டிமென்ட்' ஆக அவற்றை வினியோகித்தார்.'கை நீட்டி அரிசியும், உப்பையும் வாங்கியோர் நமக்குத்தான் ஓட்டளிப்பர். தமிழர்கள் உப்பு சாப்பிட்ட வீட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். நாம் தான் அடுத்த ஊராட்சி தலைவர்' என, தன் சகாக்களிடம் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.ஆனால் இவரை எதிர்த்து போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரும், இவரை காப்பி அடித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் 25 கிலோ அரிசி சிப்பம் மற்றும் உப்பு பாக்கெட் ஒன்றை வழங்கியுள்ளார்.

'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதைப் போல, வாக்காளர்களும் இரு வேட்பாளர்கள் கொடுத்த அரிசியையும், உப்பையும் வாங்கிக் கொண்டனர். தேர்தலன்று ஓட்டு போட்டு வெளியே வரும் வாக்காளரிடம், அரிசியும், உப்பையும் கொடுத்த வேட்பாளர்கள், யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என கேட்க ஆவலாக இருப்பர்.அவர்களிடம் 'உங்கிட்ட அரிசியும், உப்பையும் வாங்கியதற்கு ஆட்டோ சின்னத்தில் ஒரு குத்து, அந்த வேட்பாளர் கொடுத்ததுக்கு கை உருளையில் ஒரு குத்து' என சொல்ல போகின்றனர்.

'ஒரு சீட்டில் இருவருக்கு ஓட்டளித்தால் செல்லாது என்பதால், அவர்களுக்கு செல்லாத ஓட்டுகள் கிடைத்தாலும் ஆச்சரியம் எதுவும் இல்லை' என, பரிசு பொருட்களை வாங்காத வாக்காளர்கள் 'கமென்ட்' அடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X