அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தண்டனைகள் தான் நீதியை நிலைநாட்டும்'

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--'பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே, நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட இயலும்' என நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடலுாரில், 14 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில், 'போக்சோ' நீதிமன்றம் முன்மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, சிறுமியருக்கு எதிரான கயமையில்

சென்னை--'பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே, நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட இயலும்' என நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கடலுாரில், 14 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில், 'போக்சோ' நீதிமன்றம் முன்மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, சிறுமியருக்கு எதிரான கயமையில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும்.கடலுார் மாவட்டத்தில், குணசேகரன் என்கிற திலகர், 34, கட்டமணியார் என்கிற ஜெய்சங்கர், 49 ஆகியோரால் ௧௪ வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர்

.குற்றவாளிகள் இருவருக்கும் மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது, இருவரும் ஆயுள்காலம் முழுதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ௧௦ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இத்தீர்ப்பால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு கிடைக்கும் 10 லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், மனரீதியான சிகிச்சையும் அளிக்க வேண்டும்.பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே, நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில், இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.இவ்வாறு ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-அக்-202123:48:49 IST Report Abuse
Bhaskaran Antha kaalathil kaarthik veetukku pugunthu thannai kalyaanam seithukollavendumnu thagaraaru seithathuninaivirukaa amma
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X