அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மின் வாரியத்தை லாபத்தில் இயக்க செயல் திட்டம் தேவை'

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'மின் வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:ஆந்திர அரசுக்குச் சொந்தமான மின் வினியோக நிறுவனங்கள், இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மின் நிறுவனங்களாக உள்ளன. கடந்த 3 மாதங்களில், 126 கோடி ரூபாய், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் 2,342 கோடி ரூபாயை, ஆந்திர மின் வினியோக நிறுவனங்கள்

சென்னை-'மின் வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:ஆந்திர அரசுக்குச் சொந்தமான மின் வினியோக நிறுவனங்கள், இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மின் நிறுவனங்களாக உள்ளன. கடந்த 3 மாதங்களில், 126 கோடி ரூபாய், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் 2,342 கோடி ரூபாயை, ஆந்திர மின் வினியோக நிறுவனங்கள் மிச்சப்படுத்தி உள்ளன. வெளிச்சந்தையில் மிக அதிக அளவில் மின்சாரம் விற்பனைக்கு தயாராக இருப்பதால், அந்த நிறுவனங்களுடன் பேசி, குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்குகின்றன.

இதனால் தான் இவ்வளவு அதிக தொகையை, ஆந்திர மின்வினியோக நிறுவனங்களால் மிச்சப்படுத்த முடிகிறது.தமிழக மின் வாரியம் 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு வட்டியாக மட்டும், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியது உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின் வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்ய வேண்டும். இதற்கான செயல்திட்டத்தை வகுத்து, ஒவ்வொரு ஆறு மாதத்திலும், எத்தனை சதவீதம் இலக்கு எட்டப்படும் என்பது குறித்த கால அட்டவணையை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
05-அக்-202103:28:54 IST Report Abuse
John Miller பெட்டி பெட்டியாக வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்கள் உள்ளது நீயும் உன் பையனும் ஒரு வருஷம் இல்ல பத்து தலைமுறைக்கு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு ஊருக்கும் உலகத்திற்கும் அறிவுரை வழங்கிக் கொண்டே இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X