அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்கள் மீது பழி சுமத்தக் கூடாது: ராஜு

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் தவறுகள் நடந்திருந்தால், அவற்றுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீதும் பழி சுமத்தக் கூடாது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜு கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தேர்தல் சமயத்தில், தி.மு.க., தலைவரும், அவரது வாரிசும், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகள், தேசிய மற்றும் தனியார்

சென்னை-'பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் தவறுகள் நடந்திருந்தால், அவற்றுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீதும் பழி சுமத்தக் கூடாது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜு கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தேர்தல் சமயத்தில், தி.மு.க., தலைவரும், அவரது வாரிசும், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகள், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில், ௫ பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 'நீங்கள் உடனே வங்கி களில், ௫ பவுன் வரை அடகு வைத்து, நகைக்கடன் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று மக்களை துாண்டும் வகையில் பேசினர்.குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டு, தற்போது நிபந்தனைகள் விதிப்பதும், கூட்டுறவு சங்கங்கள் மீதும், மக்கள் மீதும் குற்றம் சுமத்தி பேசுவதும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அந்த தவறுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீதும் பொதுவாக பழி சுமத்தக் கூடாது.கூட்டுறவு சங்கங்கள் மீது, அவப்பெயரை ஏற்படுத்தினால், அதன் உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து, தங்கள் வைப்புத் தொகையை திருப்பி கேட்பர். எனவே, எந்த சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதோ, அந்த சங்கத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராஜு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
05-அக்-202109:48:57 IST Report Abuse
R.RAMACHANDRAN எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் நகை கடன் கொடுத்து அவைகளை தள்ளுபடிக்கு உள்ளாக்கி குற்றங்கள் செய்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X