அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளை மூட அன்புமணி வலியுறுத்தல்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'மதுவால் தாத்தா, பேரன் உயிரிழந்துள்ளதால், இனியும் தாமதிக்காமல், மதுக்கடைகளை மூட வேண்டும்' என்று பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:வேலுார் மாவட்டம், திருவலம் அருகில் உள்ள திருப்பாக்குட்டை, கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சின்னசாமி. தன் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். பாட்டிலில் இருந்த பெரும் பகுதி மதுவை

சென்னை-'மதுவால் தாத்தா, பேரன் உயிரிழந்துள்ளதால், இனியும் தாமதிக்காமல், மதுக்கடைகளை மூட வேண்டும்' என்று பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:வேலுார் மாவட்டம், திருவலம் அருகில் உள்ள திருப்பாக்குட்டை, கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சின்னசாமி. தன் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். பாட்டிலில் இருந்த பெரும் பகுதி மதுவை குடித்து விட்டு, 'டிவி' பார்ப்பதற்காக சென்று விட்டார். மதுவை பழச்சாறு எனக்கருதி, அவரது 5 வயது பேரன் குடித்துள்ளான். அடுத்த சில நிமிடங்களில், சிறுவனுக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு போராடிய சிறுவனை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பேரன் உயிருக்கு போராடுவதை கண்ட தாத்தா சின்னசாமி, அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைவிட பெரிய கொடுமையும், சோகமும், இழப்பும் இருக்க முடியாது. இனி, இத்தகையை நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க, மதுவிலக்கை அரசு ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnanravi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-202112:19:34 IST Report Abuse
krishnanravi மது வேணும் நாட்டிற்கு நீ பொய் குடிக்காம இருக்க வேண்டும் ஆர்சங்கத்திற்கு நீ ஆர்டர் போடா கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X