தமிழ்நாடு

மது, பிரியாணியுடன் அமோக கவனிப்பு: தேர்தல் அமர்க்களம்! சகல பலத்துடன் களம் காணும் கட்சிகள்

Updated : அக் 05, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தொகுதியைக் கைப்பற்றும் முனைப்போடு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் 'தாராளம்' காட்டி வருகின்றனர். பறக்கும் படையினர் கண்களில் இது படவில்லை என, மற்ற கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மாவட்ட ஊராட்சி 3வது வார்டு கவுன்சிலர் தேர்தலில், ஆறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஐந்து சுயேச்சைகள் என, 11 பேர் களத்தில் உள்ளனர்.இந்த வார்டில், 15
மது, பிரியாணியுடன் அமோக கவனிப்பு: தேர்தல் அமர்க்களம்! சகல பலத்துடன் களம் காணும் கட்சிகள்

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தொகுதியைக் கைப்பற்றும் முனைப்போடு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் 'தாராளம்' காட்டி வருகின்றனர். பறக்கும் படையினர் கண்களில் இது படவில்லை என, மற்ற கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மாவட்ட ஊராட்சி 3வது வார்டு கவுன்சிலர் தேர்தலில், ஆறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஐந்து சுயேச்சைகள் என, 11 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த வார்டில், 15 ஊராட்சிகளில், 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில், ஆனந்தனும், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமியும் போட்டியிடுகின்றனர்.பொறுப்பாளர் நியமனம்தி.மு.க.,வில் ஒவ்வொரு ஊராட்சியிலும், வெளியூரைச் சேர்ந்த, 50 பேர், உள்ளூரைச் சேர்ந்த, 50 பேர் என, 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்தி, ராமச்சந்திரன், அருண்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பையா கிருஷ்ணன், சேனாதிபதி என, முக்கிய பிரமுகர்கள் பொறுப்பாளர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.,வில், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கவனிப்பு இரு கட்சியினரும், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து, குடும்பத் தலைவரின் மொபைல் எண்ணை குறித்து செல்கின்றனர்.பிரசாரத்துக்கு உடன் செல்லும் தொண்டர்களுக்கு தினமும் மதியம் சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், முட்டை வழங்கப்படுகிறது.

இரவில், விருப்பமுள்ளோருக்கு 'சரக்கு'ம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு தோட்டத்தில் பண்ணை வீடு வாடகைக்கு எடுத்து, சமையல் செய்து, உணவு வழங்குகின்றனர்.அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், வரும்போது ரோட்டின் இருபுறமும், கொடி, டியூப் லைட் என, அமர்க்களப்படுத்துகின்றனர்.முக்கிய பிரமுகர்கள் வருகைக்கு, பணம் கொடுத்து, ஆட்களை அழைத்து வருகின்றனர்,பறக்காத படைதேர்தல் பார்வையாளர், பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இவர்களால், கட்சிகளின் தாராள செயல்பாட்டுக்கு எவ்வித இடையூறும் இல்லை.

ஒரு வேட்பாளர், அதிகபட்சமாக, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு கட்சிகளும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றன.குற்றச்சாட்டு'ஆளுங்கட்சியினர் தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கின்றனர். பிரசாரத்தின்போது, பொதுமக்கள் குறை கூறினால், அப்போதே அதிகாரிகளை மொபைலில் தொடர்பு கொண்டு, உடனடியாக சரி செய்யும்படி, வற்புறுத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ம.நீ.ம., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202109:48:29 IST Report Abuse
duruvasar விடியல் வந்து 4 மாதமாகிவிட்டதை உணராமல் பக்கத்தை நிரப்ப அச்சிடப்படும் செய்தி. சீசனுக்கு தகுந்தாற்போல் தீபாவளி தள்ளுபடி விற்பனை செய்திய வெளியிடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X