அ.தி.மு.க., வேட்பாளரை மறித்து வாக்குவாதம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
அன்னுார்:அ.தி.மு.க., பிரசார வாகனத்தை மறித்து, சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்காக, அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமியின் பிரசார வாகனம் நேற்று முன்தினம் இரவு பசூர் ஊராட்சி, புதுப்பாளையம் வந்தது.பிரசார வாகனத்தில், வடக்கு மாவட்டச் செயலாளரும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,வுமான அருண்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வேட்பாளர்

அன்னுார்:அ.தி.மு.க., பிரசார வாகனத்தை மறித்து, சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்காக, அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமியின் பிரசார வாகனம் நேற்று முன்தினம் இரவு பசூர் ஊராட்சி, புதுப்பாளையம் வந்தது.பிரசார வாகனத்தில், வடக்கு மாவட்டச் செயலாளரும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,வுமான அருண்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வேட்பாளர் கருப்பசாமி ஆகியோர் வந்தனர். அப்போது, மத்திரெட்டிபாளையம் மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த சிலர் பிரசார வாகனத்தை மறித்தனர்.வேட்பாளர் கருப்பசாமி, 'ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக' புகார் தெரிவித்தனர். வாகனத்தை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.க.,வினருக்கும், பிரசார வாகனத்தை தடுத்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பிரசார வாகனத்தை மறித்தவர்களை அங்கிருந்து அகற்றினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X