சொன்னா கேளுங்க மது வேண்டாமுங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னா கேளுங்க மது வேண்டாமுங்க!

Added : அக் 05, 2021
Share
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள தடாகம், பன்னிமடையில், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.கோவை மாவட்ட கலால் துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், துடியலுார் அருகே பன்னிமடை பஸ்ஸ்டாண்டில் நடந்தது. கரகாட்ட கலைஞர்கள், மதுவின் தீமைகள் குறித்து பிரசார பாடலின் மூலம் விளக்கினர்.இதில், மது
 சொன்னா கேளுங்க மது வேண்டாமுங்க!

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள தடாகம், பன்னிமடையில், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.கோவை மாவட்ட கலால் துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், துடியலுார் அருகே பன்னிமடை பஸ்ஸ்டாண்டில் நடந்தது. கரகாட்ட கலைஞர்கள், மதுவின் தீமைகள் குறித்து பிரசார பாடலின் மூலம் விளக்கினர்.இதில், மது அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கும், நரம்புத்தளர்ச்சி, கை, கால் நடுக்கம் உண்டாகும். பசியின்மை ஏற்படும். நினைவாற்றல் குறையும். கண்பார்வை பறிபோகும், ஜீரண சக்தி குறையும், மலட்டுத்தன்மை உண்டாகும். பணக் கஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பாகும், உறவினர் சுற்றத்தாரின் உறவுகள் பாதிக்கப்படும்.பிள்ளைகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயர் ஏற்படும். குடிப்பழக்கம் குடும்பத்தை சீரழிக்கும். உடல்நிலையை பாதிக்கும் என்ற கருத்துகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.கோவை மாவட்ட கலால் துறை சார்பில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில், கலால் துறை தாசில்தார் விமலா, வருவாய் அலுவலர் கமலஹாசன், மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு எஸ்.ஐ., நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X