சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய தோட்டங்களில் மின் ஒயர்கள் திருட்டு

Added : அக் 05, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே வரபாளையத்தில், விவசாய தோட்டம் ஒன்றில் மின் ஒயர்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சின்னதடாகம் அடுத்த, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் பொன்னுாத்து அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி,52; விவசாயி.இவருடைய தோட்டத்தில் இருந்த, 120 மீட்டர் நீளமுள்ள மின் ஒயர்கள் மற்றும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள்

பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே வரபாளையத்தில், விவசாய தோட்டம் ஒன்றில் மின் ஒயர்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சின்னதடாகம் அடுத்த, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் பொன்னுாத்து அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி,52; விவசாயி.இவருடைய தோட்டத்தில் இருந்த, 120 மீட்டர் நீளமுள்ள மின் ஒயர்கள் மற்றும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இதுகுறித்து, தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.'தடாகம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதி தோட்டங்களில் உள்ள கிணறுகளில் மின்சார ஒயர், மோட்டார் உள்ளிட்டவைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, திருட்டு சம்பவங்களை ஒடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X