பொது செய்தி

தமிழ்நாடு

கற்க வேண்டிய முதல் பாடம் ஒழுக்கம்: கல்லூரி முதல்வர் பேச்சு

Added : அக் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;"மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கமே முதல் படிப்பு. அடுத்ததுதான் மற்ற பாடங்கள்," என, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுகுமாரன் பேசினார்.மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்பு நேற்று தொடங்கியது.இந்த மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கல்லுாரி நுழைவாயிலில், முதல்வர், பேராசிரியர்கள் வரவேற்றனர்.
 கற்க வேண்டிய முதல் பாடம் ஒழுக்கம்: கல்லூரி முதல்வர் பேச்சு

மேட்டுப்பாளையம்;"மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கமே முதல் படிப்பு. அடுத்ததுதான் மற்ற பாடங்கள்," என, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுகுமாரன் பேசினார்.மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்பு நேற்று தொடங்கியது.இந்த மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கல்லுாரி நுழைவாயிலில், முதல்வர், பேராசிரியர்கள் வரவேற்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, முதல்வர் சுகுமாறன் பேசியதாவது:பெற்றோரே, உங்கள் மகன், மகள் கல்லுாரிக்கு முறையாக வருகிறார்களா என, பேராசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்க வேண்டும்.ஒழுக்கமே முதல் படிப்பு. அடுத்ததுதான் மற்ற பாடங்கள். கல்லுாரிக்கு வரும் மாணவ, மாணவிகள், நேர்த்தியாக ஆடை அணிந்து வரவேண்டும். சில மாணவர்கள், பெண்கள் அணியும் 'லெகின்ஸ்' அணிந்து வருகின்றனர். அதேபோன்று, ஒழுங்கற்று முடி வெட்டியுள்ளனர்.சில மாணவ, மாணவிகள், பெற்றோர்களை ஏமாற்றுகின்றனர். ஆசிரியர்களையும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.எனவே, மாணவர்களை கண்காணிக்கும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு, 50 சதவீதமும், பெற்றோருக்கு, 50 சதவீதம் பங்கு உள்ளது. இது ஒரு கூட்டு முயற்சியாகும்.உங்கள் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை, பெற்றோர் அவசியம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, கல்லுாரி முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், பாண்டியராஜன், சிவஞான சித்தி, தையல்நாயகி,அபிராமி, பவித்ரா உள்ளிட்ட பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X