தேர்தல் நன்கொடை பத்திர மனு; 8ல் விசாரிக்க வாய்ப்பில்லை : உச்ச நீதிமன்றம்

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-'தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள வரை, பத்திரங்கள் விற்பனையை மீண்டும் துவங்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரிய பொது நல மனுவை, அவசரமாக வரும் 8ம் தேதியன்று விசாரிக்க வாய்ப்பில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோடிக்கணக்கில் பணம்தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக

புதுடில்லி-'தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள வரை, பத்திரங்கள் விற்பனையை மீண்டும் துவங்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரிய பொது நல மனுவை, அவசரமாக வரும் 8ம் தேதியன்று விசாரிக்க வாய்ப்பில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


கோடிக்கணக்கில் பணம்தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக தேர்தல் நன்கொடை பத்திர விற்பனையை மத்திய அரசு துவங்கியது.இதை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதில், 'நன்கொடை பத்திர விற்பனை வாயிலாக பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் வருகின்றன.

'இதில் வெளிப்படை தன்மை காக்கப்படுவது இல்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன' என, குறிப்பிடப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நடக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'நன்கொடை பத்திரங்கள் வாயிலாக 6,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.


latest tamil news


இதில் 60 சதவீதம் மத்தி யில் ஆளும் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.'எனவே இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை, நன்கொடை பத்திர விற்பனையை மீண்டும் துவக்க மத்திய அரசு தடை விதிக்க உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டு இருந்தது.விசாரணைஇந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அவசர வழக்காக கருதி, வரும் 8ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினார்.'வரும் 8ம் தேதிக்கு பின் தசரா விடுமுறை வருவதால் அன்றைய தினம் மனுவை விசாரிக்க வாய்ப்பில்லை' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202111:37:41 IST Report Abuse
ஆரூர் ரங் ஜெயிக்க வாய்ப்பு குறைவான நேர்மையான கட்சிக்கு நிதி உதவத் தயக்கத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் பழி வாங்கலுக்கு🤥 பயம்தான். முன்பு மிரட்டல்😡 மூலம் கறுப்புப் பணமாக கட்சிக்கு நிதி சேர்த்தவர்கள் இப்போ அழுவது சகஜம். ஏனெனில் இந்தப் பத்திரங்களை வங்கி மூலம் வெள்ளைப் பணமாக மட்டுமே வாங்கி வங்கி மூலமே பணமாக மாற்ற முடியும். இது காங்கிரஸ் கலாச்சாரதுக்கு ஆகாது
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
05-அக்-202109:34:11 IST Report Abuse
RandharGuy இன்னும் நிறைய இருக்கு...பி எம் கேர்ஸ் .....பண்டோரா பேப்பர்ஸ் .....ரகுராம் ராஜன் கொடுத்த கடன்கார லிஸ்ட் ...சீக்கிரம் முடிங்க..நம்ம ஜி இன்னும் மல்லையா மோடி கறுப்புப்பணம் கொண்டுவரதுர்குல்ல
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-அக்-202109:04:20 IST Report Abuse
duruvasar பிஜேபிக்கு 60 சதவிகிதம் எங்களுக்கு 40 சதவிகிதம் தானா ? நாங்கள் என்ன தாழ்தப்பட்டவர்களா? என்ன தயா இதெல்லாம்.? சமூக அநீதியை எதிர்க்கும் பிராஷாந் பூஷனின் நியாமான குமுறல் . சமூகநீதி காவலர்கள் அனைவரும் ஓரணியில் திரள அருமையான நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X