பொது செய்தி

தமிழ்நாடு

முதலாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் புத்தாக்க நிகழ்ச்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்,:காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, புத்தாக்க நிகழ்வு நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ரூபா, தலைமை வகித்தார். கோவை, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், மொழித்துறை தலைவர் விசுவநாதன் பேசியதாவது:மதிப்புமிக்கது கல்வி. எதை வேண்டுமானாலும், நாம் மற்றவர்களிடம் பெற முடியும். கற்ற கல்வியையும், அதனால்
 முதலாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் புத்தாக்க நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம்,:காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, புத்தாக்க நிகழ்வு நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ரூபா, தலைமை வகித்தார். கோவை, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், மொழித்துறை தலைவர் விசுவநாதன் பேசியதாவது:மதிப்புமிக்கது கல்வி. எதை வேண்டுமானாலும், நாம் மற்றவர்களிடம் பெற முடியும். கற்ற கல்வியையும், அதனால் பெற்ற அறிவையும், ஒருபோதும் வாங்க முடியாது. எந்த உருவத்திலும் வாய்ப்பு வரலாம்; உதாசீனப்படுத்தக் கூடாது. கல்வி, நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டால், வாழ்க்கை சரியான பாதையில் செல்லும். அவர்கள், தங்களின் அனுபவத்தை, உங்களுக்கு கடத்துகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.துறைத் தலைவர்கள், ஜெயந்தி, தேவபிரியா, சண்முகப்பிரியா, சாரா, உமாபிரியா உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X