பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு: ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் அலுவலர் தகவல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
அன்னுார்:"ஓட்டுச்சாவடிகளில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் பேசுகையில்,
 ஓட்டுச்சாவடிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு: ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் அலுவலர் தகவல்

அன்னுார்:"ஓட்டுச்சாவடிகளில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் பேசுகையில், "ஊராட்சி செயலாளர்கள், தங்கள் ஊராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாளன்று தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்.தடையில்லாத மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் தரப்பட்டுள்ளது. எனினும், அதுகுறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடியின் முன்பகுதியில், தன்னார்வலர்கள், வாக்காளர்களின் கைகளில் சானிடைசர் தெளித்து, உடல் வெப்பம் பரிசோதித்த பின்னரே, உள்ளே அனுமதிப்பர். ஓட்டுச்சாவடிக்குள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிகள் பணிபுரிவோருக்கு ரப்பர்கையுறை, சாதாரண கையுறை, பேஸ் மாஸ்க், முழு கவச உடை, சானிடைசர் என, முழுமையாக அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.யாருக்காவது உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக தெரிய வந்தால், மாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் வாக்களிக்க வரும்படி தெரிவிக்க வேண்டும். பூத் ஸ்லிப்புகளை 8ம் தேதிக்குள் வினியோகித்து விடவேண்டும். வினியோகிக்க முடியாவிட்டால், தேர்தல் நாளன்று ஓட்டுச்சாவடியில் வினியோகிக்க வேண்டும்" என்றார்.கூட்டத்தில், உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், நவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X