பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது: கலெக்டரிடம் நேரில் முறையீடு

Added : அக் 05, 2021
Share
Advertisement
அன்னுார்:'விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது' என, கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.தமிழக விவசாயிகள் சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால், மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட விவசாயிகள், கோவை கலெக்டர் சமீரனிடம், நேற்று, நேரில் அளித்த மனு:அன்னுார் தாலுகாவில் நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில், 3,800 ஏக்கர்

அன்னுார்:'விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது' என, கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.தமிழக விவசாயிகள் சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால், மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட விவசாயிகள், கோவை கலெக்டர் சமீரனிடம், நேற்று, நேரில் அளித்த மனு:அன்னுார் தாலுகாவில் நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில், 3,800 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு நில கையகப்படுத்துதல் சட்டம் 1997ன்படி கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி வழங்கக் கோரி 'டிட்கோ' முதன்மை இயக்குனர், தமிழக அரசிடம் கோரியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த ஆறு ஊராட்சிகளில், 40 கிராமங்களில், 50 ஆயிரம் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.இங்கு பல ஆயிரம் பேர், கால்நடை வளர்ப்பு செய்து வருகின்றனர். மக்களின் 70 ஆண்டு கால கனவான, அத்திக்கடவு திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்தில் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில், நீர் நிரம்பி, விவசாயம் செழிக்கும் என்று நாங்கள் ஆவலுடன் உள்ளோம். இந்நிலையில், நிலங்களை கையகப்படுத்துவதாக வந்த தகவல், இங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு கிராமத்திலும், ஊர்க் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தொழில்பேட்டை அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இத்துடன் ஊராட்சி மன்றங்களிலும் தொழில்பேட்டை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், அமைதியான முறையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினோம்.வன விலங்குகளும் முழு சுதந்திரத்துடன் வாழ வழி செய்யப்பட்டுள்ள நம் நாட்டில், விவசாயிகளான நாங்கள், எங்கள் மண்ணில் குறைந்தபட்சம் பிழைக்க ஏதுவாக, 'விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது; தொழில்பேட்டை திட்டம் ரத்து' என்ற சட்டப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர், தொழில்துறை முதன்மைச் செயலர் மற்றும் நில எடுப்பு முதன்மைச் செயலர் ஆகியோருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X