அதிக ரத்த தானம் செய்த வாலிபர் சங்கம் கவுரவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக ரத்த தானம் செய்த வாலிபர் சங்கம் கவுரவிப்பு

Added : அக் 05, 2021
Share
அன்னுார்:அதிக அளவில் ரத்த தானம் செய்த வாலிபர் சங்கத்திற்கு, கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் நாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் அதிக அளவில் இரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்குகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்த ஆண்டு கொரோனா காலத்திலும், 356 யூனிட் ரத்தத்தை, தானமாக

அன்னுார்:அதிக அளவில் ரத்த தானம் செய்த வாலிபர் சங்கத்திற்கு, கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் நாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் அதிக அளவில் இரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்குகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்த ஆண்டு கொரோனா காலத்திலும், 356 யூனிட் ரத்தத்தை, தானமாக வழங்கியுள்ளது.இதையடுத்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சமீரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமாரிடம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், துணை செயலாளர் அர்ஜுன், ரத்த தான கழக ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X