70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி மத்திய அமைச்சர் தகவல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி-“நம் நாட்டில் 18 வயதை கடந்தோரில் 70 சதவீத பேருக்கு தடுப்பூசியின் முதல், 'டோஸ்' செலுத்தப்பட்டுவிட்டது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து

புதுடில்லி-“நம் நாட்டில் 18 வயதை கடந்தோரில் 70 சதவீத பேருக்கு தடுப்பூசியின் முதல், 'டோஸ்' செலுத்தப்பட்டுவிட்டது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்து 46 ஆயிரத்து 176 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டு மொத்தமாக 91 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் பேருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது: நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அதிவேகமாக நடந்து வருகிறது. 18 வயதை கடந்தோரில் 70 சதவீத பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X